மேட்டுப்பாளையத்தில் கார் உதிரிபாக கடையில் திருடிய 3 வாலிபர்கள் கைது

மேட்டுப்பாளையம்:மேட்டுப்பாளையம் அண்ணாஜிராவ் சாலை பகுதியைச்சேர்ந்தவர் முஹம்மது ரபீக்(48). இவர் இதே பகுதியில் தனது அண்ணன் நாசருடன் சேர்ந்து வெள்ளிப்பாளையம் ஸ்ரீரங்கராயன் ஓடை அருகே கார் உதிரிபாகங்களுக்கான கடை நடத்தி வருகின்றார்.கடந்த 17ம் தேதி‌ இரவு வழக்கம் போல் கடையின் முன் 6 கியர் பாக்ஸ்களை வைத்து விட்டு சென்றுள்ளனர்.மறுநாள் காலை வந்து பார்த்த போது கியர் பாக்ஸ்கள் மாயமானது கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து முஹம்மது ரபீக் அளித்த புகாரின் பேரில் மேட்டுப்பாளையம் போலீசார் விசாரித்து வந்தனர். இந்நிலையில் மேட்டுப்பாளையம் – சிறுமுகை சாலையில் போலீசாரின் வாகன சோதனையின் போது சந்தேகத்திற்கு இடமான வகையில் அவ்வழியே வந்த மூவரை காவல் நிலையம் அழைத்துச்சென்று விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர்கள் ஈரோடு மாவட்டம் பவானி பெரிய மோளபாளையம் பெருமாள் கோயில் தெருவைச் சேர்ந்த கார்த்திக்(22),வீரபத்திரன்(27), அத்தாணி மூங்கில் பட்டியை காமாட்சி அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த தீனதயாளன்(24) என்பதும்,முஹம்மது ரபீக் கடையில் கார் உதிரி பாகங்களை திருடியதும் தெரிய வந்தது. இதையடுத்து மூவரையும் கைது செய்த மேட்டுப்பாளையம் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை சிறையில் அடைத்தனர்.

The post மேட்டுப்பாளையத்தில் கார் உதிரிபாக கடையில் திருடிய 3 வாலிபர்கள் கைது appeared first on Dinakaran.

Related Stories: