2 நீதிபதிகள் பணி ஓய்வு காரணமாக உச்சநீதிமன்ற கொலீஜியத்தில் மாற்றம்

புதுடெல்லி: உச்ச நீதிமன்ற நீதிபதிகள் இருவர் பணி ஓய்வு பெற்றதை தொடர்ந்து கொலீஜியத்தில் 2 நீதிபதிகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர். கோடை விடுமுறைக்கு பின் உச்ச நீதிமன்றம் வரும் 3ம் தேதி திறக்கப்பட உள்ளது. இந்த விடுமுறையின் போது, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கேஎம். ஜோசப், அஜய் ரஸ்தோகி முறையே கடந்த 16 மற்றும் 17ம் தேதிகளில் பணி ஓய்வு பெற்றனர். இதையடுத்து கொலீஜியத்தில் பதவி வகித்து வந்த நீதிபதிகள் ஜோசப், ரஸ்தோகிக்கு பதிலாக உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பிஆர். கவாய் மற்றும் சூர்யகாந்த் கொலீஜியத்தில் இடம் பெற்றுள்ளனர்.

தற்போது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டிஒய். சந்திரசூட் தலைமையிலான கொலீஜியத்தில் சஞ்சய் கிஷன் கவுல், சஞ்சீவ் கன்னா, கவாய் மற்றும் சூர்யகாந்த் உள்ளனர். இதனால், உச்சநீதிமன்றத்தில் அனுமதிக்கப்பட்டுள்ள 34 நீதிபதிகளின் எண்ணிக்கை நீதிபதி வி. ராமசுப்பிரமணியன் இன்றுடன் பணி ஓய்வு பெற உள்ளதால் தற்போது 31 ஆக குறைகிறது. அதே போல், நீதிபதி கிருஷ்ணா முராரி வரும் 8ம் தேதியுடன் ஓய்வு பெறுவதால் இந்த எண்ணிக்கை 30 ஆக குறைய உள்ளது.

The post 2 நீதிபதிகள் பணி ஓய்வு காரணமாக உச்சநீதிமன்ற கொலீஜியத்தில் மாற்றம் appeared first on Dinakaran.

Related Stories: