வந்தே பாரத் ரயில் பெட்டிகள் தயாரிப்பு ஐ.சி.எப். தொழிற்சாலையில் தெலங்கானா கவர்னர் ஆய்வு

சென்னை: தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் நேற்று ஐ.சி.எப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பெட்டிகள் தயாரிப்பதை ஆய்வு செய்தார். அப்போது, வந்தே பாரத் ரயிலின் வசதியான இருக்கைகள், பயணிகள் ரயில் ஓட்டுநருடன் அவசர காலங்களின்போது பேச வசதியாக அமைக்கப்பட்டுள்ள டாக் பேக் சிஸ்டம், ஒவ்வொரு இருக்கையிலும் சார்ஜிங் வசதி, மாற்றுத்தினாளிகளுக்கான சிறப்புக்கழிவறை உள்ளிட்ட வசதிகளை பாராட்டினார். 25வது வந்தே பாரத் ரயில் தொடரை தயாரித்து அனுப்பியதற்காக ஐசிஎப் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களை பாராட்டிய ஆளுநர், ஐசிஎப் இதுவரை 71,000க்கும் மேலான ரயில்பெட்டிகளை தயாரித்து உலகின் தலைசிறந்த ரயில் பெட்டித்தொழிற்சாலையாக விளங்குவது தமிழகத்திற்கே பெருமை சேர்ப்பதாகவும் கூறினார். நிகழ்ச்சியில் ஐ.சி.எப். பொதுமேலாளர் பி.ஜி.மல்லையா, முதன்மை தலைமை இயந்திரவியல் பொறியாளர் எஸ்.ஸ்ரீனிவாஸ், முதன்மை தலைமைப்பணியாளர் நல அதிகாரி ஆர்.மோகன்ராஜா உள்பட அதிகாரிகள் உடனிருந்தனர்.

The post வந்தே பாரத் ரயில் பெட்டிகள் தயாரிப்பு ஐ.சி.எப். தொழிற்சாலையில் தெலங்கானா கவர்னர் ஆய்வு appeared first on Dinakaran.

Related Stories: