இரும்பு உருக்காலையை மூட வலியுறுத்தி 98வது நாளாக காத்திருப்பு போராட்டம்

பல்லடம், ஜூன் 25: பல்லடம் அருகே உள்ள அனுப்பட்டி கிராமத்தில் தனியாருக்கு இரும்பு உருக்காலை பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந்த உருக்காலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி அனுப்பட்டி கிராம மக்கள், விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் உள்ளிட்டோர் கடந்த 98 நாட்களாக காத்திருப்பு போராட்டம் உட்பட பல தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். உருக்காலை கடந்த 2 மாதங்களாக செயல்பட தடை விதிக்கப்பட்டது. உருக்காலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி அனுப்பட்டியில் அந்த கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் தொடர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கிராம மக்களை கோவை தொகுதி எம்பி நடராஜன் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார். மேலும், கிராம மக்களிடம் போராட்டங்கள் குறித்தும், இரும்பு உருக்காலையினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்தும் கேட்டறிந்தார். பின்னர் உருக்காலை குறித்து திருப்பூர் மாவட்ட நிர்வாகத்தோடு பேசி உரிய நடவடிக்கை எடுப்பதற்கு வலியுறுத்துவதாக கூறினார். நிகழ்ச்சியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஒன்றிய செயலாளர் வை.பழனிசாமி, மார்க்சிஸ்ட் கம்யூ. கட்சி ஒன்றிய செயலாளர் பரமசிவம், நிர்வாகிகள் முருகேஷ், முருகசாமி, செந்தில்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

The post இரும்பு உருக்காலையை மூட வலியுறுத்தி 98வது நாளாக காத்திருப்பு போராட்டம் appeared first on Dinakaran.

Related Stories: