அதிமுக தலைமையிலேயே கூட்டணி அமையும்.. அண்ணா மலையாவது உண்ணாமலையாவது: முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு காட்டம்

மதுரை: அதிமுக தலைமையிலேயே கூட்டணி அமையும் அண்ணா மலையாவது உண்ணாமலையாவது என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு காட்டமாக கூறியதுடன் முதலமைச்சர் கருத்தையும் வரவேற்றுள்ளார். மதுரை மாவட்டம் சமயநல்லூர் அருகே யுவரிமான் கிராமத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் மாநிலங்களில் எந்த கட்சி வலுவாக உள்ளதோ அதன் தலைமையில் தான் கூட்டணி அமையும் என்று முதலமைச்சர் முக ஸ்டாலின் கூறிய கருத்தை வரவேற்பதாக தெரிவித்தார். முதல்வர் உண்மையை தான் கூறியுள்ளார். அதிமுக தலைமையில் தான் கூட்டணி அமையும் என்று அவர் கூறினார்.

அப்போது அண்ணாமலை பாஜக தலைமையில் தான் கூட்டணி என்கிறாரே என்ற கேள்விக்கு அண்ணாமலையாவது உண்ணாமலையாவது என காட்டமாக கூறியதுடன் கூட்டணி குறித்து அவரது கட்சி தலைமையே முடிவெடுக்கும் அவர் அல்ல என்றும் தெரிவித்தார். மேலும் ஆளுநர் ரவி விவகாரம் குறித்த கேள்விக்கு நங்கள் அவரை வாழ்த்தவும் இல்லை, வசை பாடவும் இல்லை என்று கூறிய அவர், தமிழன் பிரதமர் என்றால் அது எடப்பாடி பழனிசாமி கூட இருக்கலாம் என்றும் தெரிவித்தார். தமிழகத்தை பொறுத்தவரை திமுகவுக்கும், அதிமுகவுக்கும் மட்டுமே போட்டி என்றும் செல்லூர் ராஜு கூறியுள்ளார்.

 

The post அதிமுக தலைமையிலேயே கூட்டணி அமையும்.. அண்ணா மலையாவது உண்ணாமலையாவது: முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு காட்டம் appeared first on Dinakaran.

Related Stories: