ஒடிசா ரயில் விபத்து கோட்ட மேலாளர் உள்பட 5 அதிகாரிகள் இடமாற்றம்: 20 நாட்களுக்கு பிறகு ரயில்வே நடவடிக்கை

பாலசோர்: ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக 5 அதிகாரிகளை இடமாற்றம் செய்து தென் கிழக்கு ரயில்வே உத்தரவிட்டுள்ளது. ஒடிசா கோர ரயில் விபத்தில் தற்போது வரை 292 பேர் உயிரிழந்து விட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. விபத்து நடந்து 20 நாட்கள் கடந்துள்ள நிலையில் தென்கிழக்கு ரயில்வேயின் ரயில்வே கோட்ட மேலாளர் உள்பட 5 அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். காரக்பூர் ரயில்வே கோட்ட மேலாளர் முகமது ஷுஜாத் ஹஷ்மி, தென்கிழக்கு ரயில்வே மண்டல முதன்மை தலைமை சிக்னல் மற்றும் தொலைத்தொடர்பு பொறியாளர் பி.எம்.சிக்தர், முதன்மை தலைமை பாதுகாப்பு அதிகாரி சந்தன் அதிகாரி, முதன்மை தலைமை பாதுகாப்பு ஆணையர் டி.பி.கசார் மற்றும் முதன்மை தலைமை வணிக மேலாளர் எம்டி ஓவைஸ் ஆகியோரை பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சிசிடிவி காமிரா பொருத்த வலியுறுத்தல் : ரயில் பயணிகளின் பாதுகாப்பை அதிகரிக்கவும், ஊழியர்களின் அலட்சியத்தை தடுக்கவும் ரிலே அறைகள், கட்டுப்பாட்டு பிரிவுகளில் கண்காணிப்பு காமிராக்களை பொருத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

The post ஒடிசா ரயில் விபத்து கோட்ட மேலாளர் உள்பட 5 அதிகாரிகள் இடமாற்றம்: 20 நாட்களுக்கு பிறகு ரயில்வே நடவடிக்கை appeared first on Dinakaran.

Related Stories: