கம்பத்தில் இரட்டை மாட்டுவண்டி பந்தயம்: 120க்கும் மேற்பட்ட ஜோடிகள் பங்கேற்பு

 

கம்பம், ஜூன் 23: அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் 85வது ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு, கம்பத்தில் இரட்டை மாட்டுவண்டி பந்தயம் நடைபெற்றது. கம்பம் நகரில் அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் 85வது ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு இரட்டை மாட்டுவண்டி பந்தயம் கம்பம்-கம்பம் மெட்டு ரோட்டில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட பொதுச்செயலாளர் சக்கரவர்த்தி தலைமை தாங்கினார்.

மாவட்ட இணைச்செயலாளர் முருகன், கம்பம் நகரச்செயலாளர் அறிவழகன், நகர தலைவர் சேகர் முன்னிலை வகித்தனர். இதில் தேனி, மதுரை, சிவகங்கை, திண்டுக்கல், திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து மாடுகளுடன் சாரதிகள் போட்டியில் கலந்து கொண்டனர். இந்த பந்தயத்தில் தேன்சிட்டு, பூஞ்சிட்டு, நடுமாடு, கரிச்சான்மாடு, பெரியமாடு என 5 வகையான பிரிவுகளில் 120க்கும் மேற்பட்ட ஜோடி மாடுகள் கலந்து கொண்டன. மாடுகளின் வயது அடிப்படையில் போட்டியின் தூரம் நிர்ணயிக்கப்பட்டது.

போட்டியை கம்பம் நகர திமுக செயலாளர் வீரபாண்டியன், அதிமுக (ஓபிஎஸ் அணி) நகர செயலாளர் ஜெகதீஷ் தொடங்கி வைத்தனர். போட்டியில் வெற்றி பெற்ற மாடுகளுக்கு பரிசு தொகை மற்றும் கோப்பைகள் பரிசாக வழங்கப்பட்டது. மாட்டு வண்டி பந்தயத்தை ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கண்டுகளித்தனர். ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

The post கம்பத்தில் இரட்டை மாட்டுவண்டி பந்தயம்: 120க்கும் மேற்பட்ட ஜோடிகள் பங்கேற்பு appeared first on Dinakaran.

Related Stories: