விருதுநகர், திருவில்லியில் 160 கிலோ ரேஷன் அரிசி 42 கிலோ குட்கா பறிமுதல்

விருதுநகர்/திருவில்லி, ஜூன் 23: விருதுநகர், திருவில்லிபுத்தூரில் போலீசார் நடத்திய சோதனையில் 160 கிலோ ரேஷன் அரிசி, 42 கிலோ குட்கா, பான்மசாலா சிக்கியது. இது தொடர்பாக பெண் உள்பட 3 பேரை கைது செய்தனர். விருதுநகர் குடிமைப் பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை சப் இன்ஸ்பெக்டர் தியாகராஜன் தலைமையிலான போலீசார் திருவில்லிபுத்தூர் கம்மாபட்டி சாலை வழியாக வந்த ஒரு ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் சுமார் 160 கிலோ ரேஷன் அரிசி இருந்தது. ஆட்டோவுடன் அரிசியை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக சுந்தரமூர்த்தி(41), தமிழரசன்(22) ஆகியோரை கைது செய்தனர்.

இதேபோல் விருதுநகர் அருகே குல்லூர்சந்தையில் வீட்டில் பான்பராக், குட்கா, பான் மசாலா மறைத்து வைத்து விற்பனை செய்வதாக சூலக்கரை போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது வீட்டில் மறைத்து வைத்திருந்த 42 கிலோ எடையிலான ரூ.70 ஆயிரம் மதிப்பிலான பான்பராக், குட்கா, பான்மசாலாவை பறிமுதல் செய்தனர். புகையிலை பொருட்களை விற்ற கோடீஸ்வரன்(35) போலீசாரை கண்டதும் தப்பிவிட்டார். அவரது மனைவி முத்துச்செல்வியை(28) கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

The post விருதுநகர், திருவில்லியில் 160 கிலோ ரேஷன் அரிசி 42 கிலோ குட்கா பறிமுதல் appeared first on Dinakaran.

Related Stories: