சென்னை: தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கோயில்களிலும் அனைத்து சமூகத்தினரும் வழிபாடு செய்யும் உரிமையை அரசு உறுதி செய்ய வேண்டும் என்று விசிக தீர்மானம் நிறைவேற்றம் நிறைவேற்றியுள்ளது. சென்னையில் விசிக தலைவர் திருமாவளவன் தலைமையில் நடந்த அக்கட்சியின் உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதில், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கோயில்களிலும் அனைத்து சமூகத்தினரும் வழிபாடு செய்யும் உரிமையை அரசு உறுதி செய்ய வேண்டும். அறநிலையத்துறையின் கீழ் உள்ள 43,283 கோயில்கள் அனைத்திலும் அறங்காவலர் குழுக்கள் அமைக்கப்பட வேண்டும்.
அறநிலையத்துறை கோயில்களில் அறங்காவலர் குழுக்களை அமைக்கும்போது சட்டப்படி ஆதி திராவிடர் ஒருவரும், பெண் ஒருவரும் அறங்காவலர்களாக நியமிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மணிப்பூர் கலவரத்துக்கு ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பொறுப்பேற்று பதவி விலக வேண்டும் என்றும் விசிக வலியுறுத்தியுள்ளது. முன்னதாக 500 டாஸ்மாக் கடைகள் மூடப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்ததற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி வரவேற்பு தெரிவித்துள்ளது. தற்போது இயங்கி கொண்டிருக்கும் பிற மதுக்கடைகளை குறிப்பிட்ட காலத்துக்குள் படிப்படியாக மூடவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
The post தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கோயில்களிலும் அனைத்து சமூகத்தினரும் வழிபாடு செய்யும் உரிமையை அரசு உறுதி செய்ய வேண்டும்: விசிக தீர்மானம் நிறைவேற்றம் appeared first on Dinakaran.
