ஏர் இந்தியா நிறுவனம் புதிதாக 470 விமானங்கள் கொள்முதல்: பாரிஸ் விமானக் கண்காட்சியில் விமான ஒப்பந்தத்தில் கையெழுத்து

பாரிஸ்: பாரிஸ் விமான கண்காட்சியில் மற்றொரு மிக பெரிய விமான ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டுள்ளது. சர்வதேச விமான தயாரிப்பு நிறுவனங்களான ஏர் பஸ், போயிங் ஆகிய இரண்டு நிறுவனங்களிடமிருந்து ரூ.5 லட்சம் கோடிக்கு மொத்தம் 470 விமானங்களை டாட்டா குழுமத்திற்கு சொந்தமான ஏர் இந்தியா நிறுவனம் கொள்முதல் செய்யவுள்ளது.

இதற்கான ஒப்பந்தம் பாரிஸ் நடைபெற்ற விமான கண்காட்சியில் கையெழுத்தாகியுள்ளது. இந்த விமானங்களை 2025ம் ஆண்டுக்குள் ஏர் பஸ், போயிங் நிறுவனங்கள் தயாரித்து ஒப்படைக்க உள்ளன. இது இந்திய விமான போக்குவரத்து வரலாற்றில் ஒரே நேரத்தில் நடைபெற்ற 2வது மிகப்பெரிய விமான கொள்முதல் ஒப்பந்தமாகும்.

இதற்கு முன்பு பாரிஸ் விமான கண்காட்சியில் நேற்று முன்தினம் ஏர்பஸ் நிறுவனத்திடமிருந்து ரூ.4 லட்சம் கோடிக்கு மொத்தம் 500 விமானங்களை இண்டிகோ நிறுவனம் கொள்ளுதல் செய்யும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. ஏற்கனவே, ஏர் இந்தியா விமான நிறுவனம் போயிங்யின் டபுள் பி ட்ரிபிள் 7 ரக விமானங்களையும், ஏர்பஸ் நிறுவனத்தின் 25A3 20 விமானங்களையும் வாங்கியுள்ளது.

The post ஏர் இந்தியா நிறுவனம் புதிதாக 470 விமானங்கள் கொள்முதல்: பாரிஸ் விமானக் கண்காட்சியில் விமான ஒப்பந்தத்தில் கையெழுத்து appeared first on Dinakaran.

Related Stories: