விபத்து நடந்தபோது பணியில் இருந்த சிலரை சிபிஐ தங்களின் வளையத்துக்குள் கொண்டுவந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், சிபிஐயின் விசாரணை வளையத்தில் இருந்த சிக்னல் பிரிவு இளநிலை பொறியாளர் அமீர் கான், பாலசோரில் அவர் குடியிருந்த வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் தலைமறைவாகியுள்ளதாக தகவல் வெளியாகின. இந்த நிலையில் ரயில் விபத்து தொடர்பாக விசாரணைக்கு அழைக்கப்பட்ட ஊழியர் தலைமறைவு என ஊடகங்களில் வெளியான செய்திகள் உண்மையில்லை என்றும், சிபிஐ விசாரணைக்கு அனைத்து ஊழியர்களும், அதிகாரிகளும் ஒத்துழைப்பு வழங்கி வருவதாகவும் தென்கிழக்கு ரயில்வே நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.
The post ஒடிசா ரயில் விபத்து இன்ஜினியர் தலைமறைவா? ரயில்வே விளக்கம் appeared first on Dinakaran.
