பட்டுக்கோட்டையில் மாநில பொதுச் செயலாளர் மகேந்திரன் ஏற்பாட்டில் ராகுல் பிறந்த தினத்தை முன்னிட்டு இந்திய ஒற்றுமை குதிரை வண்டி போட்டி

பட்டுக்கோட்டை: காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு, சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் சார்பில் இந்திய ஒற்றுமை குதிரை வண்டி எல்கை பந்தயம் பட்டுக்கோட்டையில் நடந்தது. மாநில பொதுச் செயலாளர் மகேந்திரன் ஏற்பாடு செய்திருந்தார். போட்டியை, மாநில துணைத்தலைவர் ராஜாதம்பி, மாநில பொதுக்குழு உறுப்பினர் கலைச்செல்வன், மாவட்ட பொருளாளர் நெப்போலியன் கொடியசைத்து துவக்கி வைத்தனர். இதில், சென்னை, மதுரை, கோவை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் குதிரை வண்டிகள் கலந்து கொண்டன. பெரிய குதிரை, கரிச்சான் குதிரை, புது குதிரை என 3 பிரிவுகளாக நடத்தப்பட்ட போட்டியில் புது குதிரைக்கு போக வர 6 மைல் தூரமும், கரிச்சான் குதிரைக்கு 8 மைல் தூரமும், பெரிய குதிரைக்கு 10 மைல் தூரமும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

பந்தயம் முடிந்ததும் பரிசளிப்பு விழா நடந்தது. நகர தலைவர் வழக்கறிஞர் ராமசாமி வரவேற்றார். மாநில பொதுச் செயலாளர் மகேந்திரன், தஞ்சை தெற்கு மாவட்ட ஓ.பி.சி. பிரிவு தலைவர் பிரபு, மாவட்ட துணைத் தலைவர் வைரக்கண்ணு, வட்டார தலைவர்கள் பட்டுக்கோட்டை கோவிசெந்தில், அன்பழகன், மதுக்கூர் ரெங்கநாதன் முன்னிலையில் 3 பிரிவுகளில் நடத்தப்பட்ட குதிரை வண்டி எல்கை பந்தயத்தில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மொத்தம் 15 பேருக்கு மாநில துணைத் தலைவர் ராஜாதம்பி மற்றும் பொறுப்பாளர்கள் ரூ.2 லட்சத்திற்கும் மேல் ரொக்க பரிசுகளும், சான்றிதழ்களும், ஷீல்டும் வழங்கினர். பந்தயத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் பக்கெட் பிரியாணி வழங்கியதுடன், சான்றிதழும், ஷீல்டுகளும் வழங்கியது குறிப்பிடத்தக்கது.

நிகழ்ச்சியில் இளைஞர் காங்கிரஸ் மாவட்ட பொதுச்செயலாளர் முத்து, மாணவர் காங்கிரஸ் மாநில பொதுச்செயலாளர் ஸ்ரீகாந்த், மாவட்ட தலைவர் சிவா, இளைஞர் காங்கிரஸ் 15வது வார்டு நவீன்சந்திரசேகரன் மற்றும் இளைஞர் மற்றும் மாணவர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர். இளைஞர் காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளர் சிவா நன்றி கூறினார். முன்னதாக பட்டுக்கோட்டையில் முத்துப்பேட்டை சாலையில் தாலுகா அலுவலகம் எதிரே உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நடந்த நிகழ்ச்சியில் ராகுல்காந்தியின் பிறந்த நாளை காங்கிரசார் கேக் வெட்டி கொண்டாடினர். மாநில துணைத் தலைவர் ராஜாதம்பி கேக் வெட்டி அனைவருக்கும் வழங்கினார்.

The post பட்டுக்கோட்டையில் மாநில பொதுச் செயலாளர் மகேந்திரன் ஏற்பாட்டில் ராகுல் பிறந்த தினத்தை முன்னிட்டு இந்திய ஒற்றுமை குதிரை வண்டி போட்டி appeared first on Dinakaran.

Related Stories: