பலாத்கார வழக்கில் அசாம் எம்எல்ஏவுக்கு ஜாமீன்

ஹைலகண்டி(அசாம்): அசாம் சட்டப்பேரவைக்கு அல்காபூர் தொகுதியில் இருந்து எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டவர் நிசாமுதின் சவுத்ரி. இவர் மீது கடந்த 2018ம் ஆண்டு பலாத்கார வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் பலமுறை நீதிமன்றம் சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகவில்லை. இதையடுத்து நிசாமுதின் சவுத்ரியை கைது செய்ய வாரண்ட் பிறப்பிக்கபட்டதை தொடர்ந்து அவர் நேற்று முன்தினம் ஹைலகண்டி நீதிமன்றத்தில் ஆஜரானார். அவரது ஜாமீன் மனுவை ஹைலகண்டி நீதிமன்றம் ஏற்று கொண்டதையடுத்து அவர் விடுவிக்கப்பட்டார்.

The post பலாத்கார வழக்கில் அசாம் எம்எல்ஏவுக்கு ஜாமீன் appeared first on Dinakaran.

Related Stories: