ரூ.4.9 கோடி கடனை திருப்பி செலுத்தாததால் புதுவை அமுதசுரபி கட்டிடத்தை வங்கி நிர்வாகம் கைப்பற்றியது

புதுச்சேரி: கடனை திருப்பி செலுத்தாததால், அமுதசுரபிக்கு சொந்தமான கட்டிடடத்தை வங்கி நிர்வாகம் கையகப்படுத்தியது. புதுவை அரசின் கூட்டுறவு நிறுவனமான அமுதசுரபி 2015-16ம் ஆண்டு அரசு சார்பில் அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் இலவச மிக்சி, கிரைண்டர் வழங்கப்பட்டது. இதற்காக ரூ.48 கோடி செலவானது. இதற்கான நிதியை அப்போதைய அரசு ஒதுக்கவில்லை. 2016ல் ஆட்சி மாற்றத்திற்குப்பின், இலவச மிக்சி, கிரைண்டர் வாங்கியதற்கு நிதி ஒதுக்காததால், அமுதசுரபி வங்கியில் வாங்கிய கடனுக்கு வட்டி கட்டி வந்தது. இதனால் ஊழியர்களுக்கு 30 மாத சம்பளம் வழங்கவில்லை.

தற்போது மீண்டும் என்ஆர் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததால், நிதி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருந்த அமுதசுரபி ஊழியர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அதனால் அமுதசுரபி நிறுவனம், பல்வேறு வங்கிகளில் கடன் பெற்று, வாங்கிய கடனுக்கு பல மாதங்கள் வட்டியும் கட்டாததால், தற்போது அமுதசுரபியின் இடத்தை வங்கி கையகப்படுத்தி உள்ளது. கடன் வழங்கிய இந்தியன் வங்கி நிர்வாகம் வட்டியுடன் சேர்த்து ரூ.4.94 கோடி கட்ட வேண்டி கடந்த மார்ச் மாதம் நோட்டீஸ் அனுப்பியது. 60 நாட்களாகியும், தொகையை செலுத்தாததால், அடமானம் வைத்த வெங்கட்டா நகரிலுள்ள 3870 சதுர அடி நிலம் மற்றும் அதில் உள்ள குடோனை வங்கி நிர்வாகம் கையகப்படுத்தி உள்ளது.

The post ரூ.4.9 கோடி கடனை திருப்பி செலுத்தாததால் புதுவை அமுதசுரபி கட்டிடத்தை வங்கி நிர்வாகம் கைப்பற்றியது appeared first on Dinakaran.

Related Stories: