நவாஸ் கட்சி தலைவராக தம்பி ஷெபாஸ் ஷெரீப் தேர்வு

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முஸ்லீம் லீக்(நவாஸ்) கட்சியின் தலைவராக ஷெபாஸ் ஷெரீப்பும், துணைத்தலைவராக மரியம் நவாசும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். பாகிஸ்தானில் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தலைமையில் பாகிஸ்தான் முஸ்லீம் லீக்(நவாஸ்) கட்சி ஆட்சி செய்து வருகிறது. இந்த கட்சியின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சி தலைவராக தற்போதைய பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் நவாஸ் ஷெரீப்பின் தம்பி ஆவார். துணைத்தலைவராக நவாஸ் ஷெரீப்பின் மகள் மரியம் நவாஸ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தலைவராக தேர்வு செய்யப்பட்ட ஷெபாஸ் ஷெரீப் கூறுகையில்,’ 2019 நவம்பர் முதல் லண்டனில் இருக்கும் எனது சகோதரர் நவாஸ் நாடு திரும்பி ஆட்சிப்பொறுப்பை ஏற்க வேண்டும்’ என்றார்.

* பாகிஸ்தானுக்கு ரூ.8 ஆயிரம் கோடி வழங்கி சீனா உதவி
பாகிஸ்தான் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவித்து வருகிறது. சீனா, சவுதிஅரேபியா உள்ளிட்ட நாடுகள் பாகிஸ்தானுக்கு உதவி வருகின்றன. அந்த வகையில் சீனா மேலும் ரூ.8 ஆயிரம் கோடி நிதிஉதவி வழங்கி உள்ளது. ஒட்டுமொத்தமாக சீனா இதுவரை ரூ.31 ஆயிரம் கோடி நிதி உதவியை சீனாவுக்கு வழங்கி உள்ளது.

The post நவாஸ் கட்சி தலைவராக தம்பி ஷெபாஸ் ஷெரீப் தேர்வு appeared first on Dinakaran.

Related Stories: