டெல்லியில் உள்ள தமிழ்நாடு பவனில் அமெரிக்க தூதருக்கு விருந்து; தன் வாழ்வில் அருமையான உணவு சாப்பிட்டதாக நன்றி கூறினார்..!!

டெல்லி: இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் எரிக் கார்செட்டி டெல்லியில் உள்ள தமிழ்நாடு பவனில் வாழை இலையில் தென்னிந்திய உணவை சாப்பிடும் வீடியோ கவனம் ஈர்த்துள்ளது. பிரதமர் மோடியின் அமெரிக்க பயணத்தையொட்டி அமெரிக்க தூதரக அதிகாரிகள் இந்தியாவில் பயணம் மேற்கொண்டு முன்னேற்பாடுகளை செய்து வருகின்றனர். அதன்படி இந்தியா வந்துள்ள அமெரிக்க தூதர் எரிக் கார்செட்டி, டெல்லியில் உள்ள தமிழ்நாடு பவனில் இந்திய தூதரக அதிகாரிகளுடன் இணைந்து தமிழ்நாட்டின் உணவுகளை விரும்பி சாப்பிட்டார்.

தலைவாழை இலை முழுவதும் பரப்பி வைக்கப்பட்ட உணவு பதார்த்தங்களை அவர் விரும்பி ருசி பார்த்தார். ஒவ்வொரு பதார்த்தத்தை பற்றியும் கேட்டறிந்த எரிக் கார்செட்டி, இன்னும் எத்தனை உள்ளன, இது எப்போது முடியும் என்று வேடிக்கையாக கேட்டார். கடைசியாக காபி குடித்து தனது விருந்தை முடித்த அவர், தன் வாழ்வில் அருமையான இந்த உணவுக்கு ஏற்பாடு செய்ததற்கு நன்றி என கூறினார். மேலும் விரைவில் சென்னையை நேரில் வந்து காண உள்ளதாகவும் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

The post டெல்லியில் உள்ள தமிழ்நாடு பவனில் அமெரிக்க தூதருக்கு விருந்து; தன் வாழ்வில் அருமையான உணவு சாப்பிட்டதாக நன்றி கூறினார்..!! appeared first on Dinakaran.

Related Stories: