உடுமலை, ஜூன் 15: உடுமலை திருப்பதி என அழைக்கப்படும் ஸ்ரீ வேங்கடேச பெருமாள் சன்னதியின் ஐந்தாம் வருட அவதார உற்சவம் நடைபெற உள்ளது. வரும் 20, 21-ம் தேதிகளில் நடைபெறும் நிகழ்ச்சிகள் விவரம்: காலை 7 மணி முதல் 8 வரை கால சந்தி, 8 மணிக்கு விஸ்வக் சேனர் திருமஞ்சனம், 8.30 மணிக்கு லட்சுமி ஹயக்ரீவர் திருமஞ்சனம். 9.30 மணிக்கு சக்கரத்தாழ்வார் திருமஞ்சனம், 10 மணிக்கு லட்சுமி நரசிம்மர் திருமஞ்சனம், 10.30 மணிக்கு தன்வந்திரி திருமஞ்சனம், 11 மணிக்கு கருடாழ்வார் திருமஞ்சனம், 11.30 மணிக்கு ஆஞ்சநேயர் திருமஞ்சனம்.
செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணிக்கு புற்று கோவிலில் இருந்து பால்குடம் புறப்படுதல். தொடர்ந்து ரேணுகா தேவி திருமஞ்சனம். அன்று மாலை 5 மணிக்கு பத்மாவதி தாயார் திருமஞ்சனம். 6 மணிக்கு ஆண்டாள் திருமஞ்சனம் நடைபெறும். புதன்கிழமை காலை 7 மணிக்கு மேல் சிறப்பு ஹோமமும் தொடர்ந்து நவகலக ஸ்தாபிதம் பெருமாள் மூலவர் உற்சவர் சிறப்பு திருமஞ்சனமும் தொடர்ந்து அலங்கார பூஜையும் மஹாதீப ஆராதனையும் நடைபெறும்.அனைவரும் கலந்து கொண்டுபத்மாவதி சமேத வெங்கடேச பெருமாளின் பேரருளை பெற வேண்டும் என, உடுமலை திருப்பதி பாலாஜி சாரிட்டபிள் டிரஸ்ட் நிர்வாகிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.
The post உடுமலை திருப்பதி கோயிலில் 5-ம் ஆண்டு அவதார உற்சவம் appeared first on Dinakaran.