காவனூர் புதுச்சேரி கிராமத்தில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு பேரணி

உத்திரமேரூர்: உத்திரமேரூர் அடுத்த காவனூர்புதுச்சேரி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் குழந்தை தொழிலாளர்கள் ஒழிப்பு தின விழிப்புணர்வு பேரணி மற்றும் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடந்தது. இதில், பள்ளி தலைமை ஆசிரியை நிர்மலா பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார். இப்பேரணியில், பள்ளி மாணவ-மாணவிகள் கலந்துகொண்டு காவனூர்புதுச்சேரி கிராமத்தில் உள்ள முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்று குழந்தை தொழிலாளர் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

அப்போது, `14 வயதுக்குட்பட்ட குழந்தைகளை ஒருபோதும் எந்தவித பணியிலும் ஈடுபடுத்த மாட்டேன். குழந்தைகள் பள்ளிக்கு செல்வதை ஊக்குவிப்பேன், குழந்தை தொழிலாளர் முறையினை முற்றிலுமாக அகற்றிட சமுதாயத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்துவேன். தமிழகத்தை குழந்தை தொழிலாளர் அற்ற மாநிலமாக மாற்றுவதற்கு என்னால் இயன்ற வரை பாடுபடுவேன்’ என உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். இந்நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியைகள், மாணவ – மாணவிகள், தன்னார்வலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post காவனூர் புதுச்சேரி கிராமத்தில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு பேரணி appeared first on Dinakaran.

Related Stories: