சர்தார் வல்லபாய் படேல் கல்லூரி நிகழ்ச்சி

 

கோவை, ஜூன் 13: கோவை சர்தார் வல்லபாய் படேல் இன்டர்நேசனல் ஸ்கூல் ஆப் டெக்ஸ்டைல்ஸ் அண்ட் மேனேஜ்மெண்ட் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டிற்கான ஜெர்மன் கூட்டாச்சி அமைச்சகத்தால் நியமிக்கப்பட்ட அமைப்புடன் இணைந்து திறன் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் இலவச நான்கு நாள் நிகழ்வு நடந்தது. பைபர் முதல் பினிஷ்டு ஆடை வரை நிலையான உற்பத்தி என்ற தலைப்பில் இந்த நிகழ்ச்சி நடந்தது. இதில் நெசவாளர்கள், ஜவுளி செயலிகள் மற்றும் ஆடை உற்பத்தியாளர்களுக்கு நிலையான உற்பத்தி நடைமுறைகளுக்கான அறிவு மற்றும் திறன்களை மேம்படுத்துவதை நோக்கமாக கொண்டு இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

இதில் சர்தார் வல்லபாய் படேல் மேலாண்மை கல்லூரி இயக்குநர் அல்லி ராணி உலகளாவிய மற்றும் தேசிய அளவில் நிலைத்தன்மை மற்றும் அதன் நடைமுறை முக்கியத்துவம் குறித்து பேசினார். கோயமுத்தூர் ஸ்பிளண்டர் மெடிகேர் டெக்னாலஜிஸ் இயக்குநர் சுதர்சன் ராமகோபாலன் செயல் முறை மேம்படுத்துதல், பாதுகாப்பு மற்றும் கழிவு குறைப்பு குறித்து விளக்கினார். இதில் லோகநாதன், ஐஎம்இஏ மண்டல நிர்வாகி செந்தில்நாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

The post சர்தார் வல்லபாய் படேல் கல்லூரி நிகழ்ச்சி appeared first on Dinakaran.

Related Stories: