நடுவேலம்பாளையத்தில் அரசு பள்ளி புதிய வகுப்பறை கட்டிட திறப்பு விழா

 

பல்லடம், ஜூன் 11: பல்லடம் அருகேயுள்ள பூமலூர் ஊராட்சி நடுவேலம்பாளையம் கிராமத்தில் ரூ. 17.62 லட்சம் மதிப்பிலான அரசு துவக்கப் பள்ளியில் புதிய இரண்டு வகுப்பறை கட்டட திறப்பு விழா, கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, பூமலூர் ஊராட்சி, கிடாத்துறையில் பூங்கா ஏற்படுத்த மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. பல்லடம் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் சோமசுந்தரம் தலைமை வகித்தார். பல்லடம் மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் கிருஷ்ணமூர்த்தி முன்னிலை வகித்தார். புதிய இரண்டு வகுப்பறை கட்டடத்தை திருப்பூர் வடக்கு மாவட்ட திமுக செயலாளர் செல்வராஜ் எம்எல்ஏ குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார்.

இந்த நிகழ்வில் பொங்கலூர் ஒன்றிய குழு தலைவருமான வக்கீல் குமார், மாவட்ட துணை செயலாளர் வக்கீல் நந்தினி, பல்லடம் ஒன்றிய குழு தலைவர் தேன்மொழி. துணைத்தலைவர் பாலசுப்ரணியம், பூமலூர் ஊராட்சி மன்ற தலைவர் பிரியங்கா, பல்லடம் ஊராட்சி ஒன்றிய குழு முன்னாள் தலைவர் பாலசுப்பிரமணியம், கிழக்கு ஒன்றிய அவைத்தலைவர் பரமசிவம், மாவட்ட பிரதிநிதிகள் பூமலூர் செந்தில் என்கிற தியாகராஜன், 63 வேலம்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் நடராஜன், மேற்கு ஒன்றிய மகளிர் தொண்டர் அணி பானுமதி, கூட்டுறவு வங்கி முன்னாள் தலைவர் அக்ரோ சீனிவாசன், ஈஸ்வரன், கராத்தே காளியப்பன், கழக நிர்வாகிகள், கிளைக் கழக நிர்வாகிகள் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

The post நடுவேலம்பாளையத்தில் அரசு பள்ளி புதிய வகுப்பறை கட்டிட திறப்பு விழா appeared first on Dinakaran.

Related Stories: