கள்ளக்காதலுக்கு எதிர்ப்பு வாலிபர் தற்கொலை

 

கோவை, ஜூன் 11: குனியமுத்தூர் சுகுணாபுரம் பகுதியை சேர்ந்தவர் சரவணன் (31). எலக்ட்ரீசியனாக வேலை செய்து வந்தார். இவருக்கும் ஏற்கனவே திருமணம் ஆன ஒரு பெண்ணுக்கும் கள்ளக்தொடர்பு இருந்து வந்தது. இதை சரவணனின் பெற்றோர் கண்டித்து வந்தனர். ஆனால், சரவணன் இதை கேட்காமல் கள்ள தொடர்பு தொடர்ந்து வந்தார். இனி நீ கள்ளக்காதலி வீட்டிற்கு போக கூடாது.

உனக்கு திருமணம் செய்து வைக்க போகிறோம். பெண் பார்த்து வைக்கிறோம் எனக்கூறியுள்ளனர். ஆனால், சரவணன் இதை ஏற்கவில்லை. சம்பவத்தன்று கள்ளக்காதலியின் வீட்டுக்கு சென்ற சரவணன், பெற்றோரின் எதிர்ப்பினால் விரக்தியடைந்து தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் இது தொடர்பாக போத்தனூர் போலீஸ் சார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post கள்ளக்காதலுக்கு எதிர்ப்பு வாலிபர் தற்கொலை appeared first on Dinakaran.

Related Stories: