கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 5 லட்சம் மரக்கன்று நடும் பணி

 

கோவை, ஜூன் 11: கோவையில் 12,500 மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டு வருகிறது. செட்டிபாளையத்தில் தெற்கு உட்கோட்டத்தினர் சார்பில் 10 அடி உயரமுள்ள மரக்கன்றுகள் நடப்பட்டன. இதில், கோவை கோட்ட மாநில நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளர் சரவணன், கோட்ட பொறியாளர் சுந்தரமூர்த்தி, உதவி கோட்ட பொறியாளர் ஆறுமுகம், உதவி பொறியாளர் பசும்பொன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நெடுஞ்சாலைத்துறையினர் கூறுகையில்,‘‘கோவை கோட்டத்தில் பிரதான மெயின் ரோடு, மாவட்ட ரோடு, இதர கிராம ரோடு என பல்வேறு பகுதிகளில் ரோட்டோரங்களில் மழை, நிழல் தரும் பல இன மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டு வருகிறது. இந்த மரக்கன்றுகளுக்கு தண்ணீர் ஊற்ற ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. தற்போது தென்மேற்கு பருவ மழை துவங்கும் நிலையிருக்கிறது.

சில மாதங்கள் மழை காலமாக இருப்பதால் மரகன்றுகள் வேகமாக வளரும் என எதிர்பார்க்கிறோம். மாவட்ட அளவில் ரோட்டோர பகுதிகளை பசுமையாக பராமரிக்கும் பணி நடக்கிறது. சாலை பணிகள் நடந்து முடிந்த பகுதியில் மரக்கன்றுகள் ேதவையான இடங்களில் நடவு செய்யப்பட்டிருக்கிறது, ’’ என்றனர்.

The post கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 5 லட்சம் மரக்கன்று நடும் பணி appeared first on Dinakaran.

Related Stories: