மகளிர் இலவச பஸ் பயண திட்டம் இன்று தொடக்கம் அண்டை மாநில எல்லைக்குள் 20 கி.மீ வரை பயணிக்கலாம்: முதல்வர் சித்தராமையா அறிவிப்பு

பெங்களூரு: கர்நாடக மாநில இலவச பஸ் பயண திட்டத்தின் கீழ் கர்நாடக அரசு பஸ் இயக்கப்படும் அண்டை மாநிலங்களில் மகளிர் 20 கிமீ தூரம் வரை இலவசமாக பயணிக்கலாம் என்று முதல்வர் சித்தராமையா அறிவித்துள்ளார். கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் அறிக்கையில் 5 இலவச திட்டங்களை அறிவித்தது. அதன்படி சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியையும் அமைத்துவிட்டது. தேர்தல் அறிக்கையில் கூறியபடி கர்நாடக அரசு பஸ்களில் மகளிருக்கு இலவச பயணம் எனும் சக்தி திட்டம் இன்று முதல் தொடங்கப்படுகிறது. இதை பெங்களூருவில் முதல்வர் சித்தராமையாவும், மாவட்டங்களில் அந்தந்த மாவட்ட பொறுப்பு அமைச்சர்களும் தொடங்கிவைக்கின்றனர்.

இந்நிலையில் அண்டை மாநிலங்களுக்கு இயங்கும் கர்நாடக பேருந்துகளில் இலவச பயணத்தை பெண்கள் மேற்கொள்ள முடியுமா என்ற கேள்வி எழுந்தது. அதற்கு விளக்கமளித்துள்ள முதல்வர் சித்தராமையா, ‘கர்நாடக அரசு பஸ்களில் மகளிர் இலவச பயண திட்டம் இன்று காலை 11 மணிக்கு விதானசவுதாவில் துவக்கிவைக்கிறேன். இதில் துணை முதல்வர் டி.கே.சிவகுமார், போக்குவரத்து துறை அமைச்சர் ராமலிங்கரெட்டி பங்கேற்கிறார்கள். கர்நாடக மாநில பெண்கள் மாநிலம் முழுவதும் இலவசமாக அரசு பேருந்தில் பயணிக்கலாம்.

ஆனால் ஏசி, வால்வோ ேபருந்தில் இந்த சலுகை கிடையாது. மாநிலங்களுக்கு இடையேயான பேருந்தில் இலவசம் கிடையாது. அதாவது பெங்களூருவில் இருந்து திருப்பதி செல்ல கர்நாடக பெண் விரும்பினால் அந்த ெபண் கோலார் மாவட்டம் முல்பாகல் எல்லை வரை இலவசமாக பயணிக்கலாம். அதன் பிறகு பயண சீட்டை பெற்று பயணிக்க வேண்டும். அந்த பெண் இலவச ஸ்மார்ட் கார்டு வைத்திருந்தாலும் செல்லாது. அதே சமயம் அண்டை மாநிலங்களுக்கு செல்லும் கர்நாடக ேபருந்தில் அம்மாநிலத்தில் 20 கிமீ தூரம் வரை இலவசமாக பயணிக்க அனுமதிக்கப்படும். பல்லாரியில் இருந்து 20 கிமீ தூரம் சென்றால் ஆந்திரா எல்லை வந்துவிடும். அதுவரை இலவசமாக பயணிக்கலாம்’ என்றார்.

The post மகளிர் இலவச பஸ் பயண திட்டம் இன்று தொடக்கம் அண்டை மாநில எல்லைக்குள் 20 கி.மீ வரை பயணிக்கலாம்: முதல்வர் சித்தராமையா அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: