மக்கள் உயிரை காப்பதை விட மாடுகளின் உயிரை காப்பதில்தான் ஒன்றிய அரசு அதிக கவனம்: காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு தலைவர் பேட்டி

சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் சிறுபான்மை துறை மாநில செயற்குழு கூட்டம் சென்னை சத்தியமூர்த்தி பவனில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு, சிறுபான்மை பிரிவு மாநில தலைவர் அஸ்லாம் பாட்ஷா தலைமை வகித்தார். சிறுபான்மை பிரிவின் மேலிட ஒருங்கிணைப்பாளர் ஹாமர் இஸ்லாம் முன்னிலை வகித்தார். மாவட்ட தலைவர்கள் எம்.எஸ்.திரவியம், அடையாறு துரை, ரஞ்சன் குமார் மற்றும் சிறுபான்மை பிரிவு மாநில துணைத் தலைவர் ஸ்டீபன், பிரின்ஸ் தேவசகாயம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலிட ஒருங்கிணைப்பாளர் ஹாமர் இஸ்லாம் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘வரும் நாடாளுமன்ற தேர்தலில், தேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தியின் முயற்சியால் நிச்சயம் வெற்றி பெறுவோம்’’ என்றார். தமிழ்நாடு காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு தலைவர் அஸ்லாம் பாட்ஷா நிருபர்களிடம் கூறுகையில், ‘‘மணிப்பூர் மாநிலத்தில் நடைபெறும் வன்முறையை கண்டித்து அங்கு வாழும் கிறிஸ்தவ மக்களுக்கு ஆதரவாக போராட்டங்களை முன்னெடுப்பது குறித்து முடிவு செய்துள்ளோம். ஒன்றிய பாஜ அரசானது, மக்களின் உயிரை விட மாடுகளின் உயிரை காப்பதிலேயே அதிக கவனம் செலுத்துகிறது. மனித உயிர்கள் அவர்களுக்கு பெரிதாக தெரியவில்லை’’ என்றார்.

The post மக்கள் உயிரை காப்பதை விட மாடுகளின் உயிரை காப்பதில்தான் ஒன்றிய அரசு அதிக கவனம்: காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு தலைவர் பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: