மலையாள நடிகர் பாஜவிலிருந்து விலகல்

திருவனந்தபுரம்: டைரக்டர் ராஜசேனனைத் தொடர்ந்து பிரபல மலையாள வில்லன் நடிகர் பீமன் ரகுவும் பாஜகவிலிருந்து விலகி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர தீர்மானித்துள்ளார். மலையாள சினிமாவில் 1980, 90களில் முன்னணி இயக்குனராக இருந்தவர் ராஜசேனன்.கடந்த சில வருடங்களுக்கு முன் இவர் பாஜகவில் சேர்ந்தார். இக்கட்சியில் இவருக்கு மாநிலக் கமிட்டி உறுப்பினர் பதவியும் வழங்கப்பட்டது. கடந்த 2021ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலில் இவர் திருவனந்தபுரம் மாவட்டம் அருவிக்கரை தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் இவர் பாஜவிலிருந்து விலகி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்தார்.இந்நிலையில் டைரக்டர் ராஜசேனனை தொடர்ந்து பழம்பெரும் மலையாள வில்லன் நடிகரான பீமன் ரகுவும் (70) பாஜவிலிருந்து விலகி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர தீர்மானித்துள்ளார்.

இவர் கடந்த 2021ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலில் கொல்லம் மாவட்டம் பத்தனாபுரம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். பாஜவிலிருந்து விலகுவது குறித்து நடிகர் பீமன் ரகு கூறியது: பாஜகவில் சேர்ந்ததின் மூலம் என்னால் மக்களுக்காக எதையும் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் சேருவேன். இவ்வாறு அவர் கூறினார்.

The post மலையாள நடிகர் பாஜவிலிருந்து விலகல் appeared first on Dinakaran.

Related Stories: