திருப்பத்தூர் இளம்பெண், வேலூர் சிறுவனுக்கு துறவறம் வழங்க ஜெய்ப்பூரில் இருந்து 3 ஆயிரம் கி.மீ. நடந்து வந்த மத குரு

திருப்பத்தூர்: திருப்பத்தூர் செட்டித்தெருவில் வசிக்கும் ஜெயின் சமூகத்தை சேர்ந்த ரத்தன்சந்த் என்பவரது மகளான சுஷ்மா(27), வேலூரை சேர்ந்த சுனில் குமாரின் மகன் சம்ரத்(14) ஆகிய இருவரும் துறவறம் செல்ல முடிவு செய்தனர். இவர்களை நேற்று முன்தினம் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில், ஜெயின் சமூகத்தினர் திருப்பத்தூரில் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக அழைத்து சென்றனர். தொடர்ந்து நேற்று திருப்பத்தூர் ஆதியூர் அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் துறவறம் ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதைக் காண இந்தியாவில் பல மாநிலங்களில் இருந்து ஏராளமான ஜெயின் சமூகத்தினர் திரண்டிருந்தனர்.
அப்போது, காலை முதல் துறவறம் ஏற்கும் சுஷ்மா மற்றும் சிறுவன் சம்ரத் ஆகியோருக்கு பட்டு வஸ்திரங்கள், அவர்களுக்கு பிடித்த நகைகள் மற்றும் ஆடைகள் அணிவித்து ஜெயின் சமூகத்தினர் நடனமாடினர்.

அதன் பிறகு அவர்களை ஊர்வலமாக அருகே உள்ள பகுதிக்கு அழைத்து சென்றனர். அங்கு அவர்களின் தலை முடியை 5 நிமிடத்தில் தாங்களாகவே பிடுங்கிக்கொண்டனர். தொடர்ந்து, ஏழ்மையானஉடைகளை அணிந்து கொண்டு துறவிகளாக வந்தனர். அப்போது, அவர்களுக்கு தீட்சை வழங்க ஜெய்ப்பூரில் இருந்து 3 ஆயிரம் கிலோமீட்டர் தூரம் 148 நாட்கள் நடை பயணமாக அங்கு வந்த தலைமை குருஜி பரம பூஜ்ய ஆச்சாரிய பகவான் மணிபிரப சூரிஸ் வர்ஜி சாத்வியிடம் தீட்சை பெற்று சத்திய பிரமாணம் மற்றும் வாக்குமூலம் அளித்தனர். இன்று துறவற பயணம் மேற்கொள்கின்றனர்.

The post திருப்பத்தூர் இளம்பெண், வேலூர் சிறுவனுக்கு துறவறம் வழங்க ஜெய்ப்பூரில் இருந்து 3 ஆயிரம் கி.மீ. நடந்து வந்த மத குரு appeared first on Dinakaran.

Related Stories: