சிவசேனா – பாஜக கூட்டணியில் விரிசல்: முதல்வர் ஷிண்டே மகன் ராஜினாமா?

மும்பை: மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவுக்கும், கூட்டணி கட்சியான பாஜகவுக்கும் இடையே விரிசல் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவின் மகனும், எம்பியுமான ஸ்ரீகாந்த் ஷிண்டே திடீரென தனது பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘தங்களது சுயநல அரசியலுக்காக சில தலைவர்கள் பாஜக – சிவசேனா (ஏக்நாத் அணி) இடையே இடையூறுகளை ஏற்படுத்தி வருகின்றனர்.

எனக்கு எந்த பதவி மீதும் ஆசை இல்லை. பாஜக – சிவசேனா கூட்டணியின் மூத்த தலைவர்கள் எந்த வேட்பாளரை முடிவு செய்கிறாரோ அவருக்கு நான் ஆதரவாக இருப்பேன். மீண்டும் பாஜக – சிவசேனா கூட்டணி மத்தியில் ஆட்சியமைக்க வேண்டும். அதனால் பாஜகவுடன் இணைந்து பணியாற்றுவோம். மேலும் யாராவது கூட்டணியில் குழப்பம் ஏற்படுத்தினால் எனது பதவியையும் ராஜினாமா செய்ய தயார்’ என்று கூறினார்.

The post சிவசேனா – பாஜக கூட்டணியில் விரிசல்: முதல்வர் ஷிண்டே மகன் ராஜினாமா? appeared first on Dinakaran.

Related Stories: