ஜெயங்கொண்டம் அருகே மகா மாரியம்மனுக்கு அலகு குத்தி காவடி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்

 

ஜெயங்கொண்டம், ஜூன் 10: அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே மணக்கரை கிராமத்தில் கிழக்கு தெருவில் அமைந்துள்ள மகா மாரியம்மனுக்கு பக்தர்கள் அழகு குத்தி காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். ஜெயங்கொண்டம் அருகே மணக்கரை மகா மாரியம்மன், மதுரை வீரன், கருப்பண்ணசாமி கோயில் பழமை வாய்ந்த கோயிலாகும். இந்த கோயிலில் ஒவ்வொரு வருடமும் பக்தர்கள் அலகு குத்தி, காவடி எடுப்பது வழக்கம் .

அதேபோல் இந்த ஆண்டு திருச்சி சாலையில் உள்ள ஆபத்து காத்த விநாயகர் கோவிலில் 50க்கும் மேற்பட்டோர் அலகு குத்தி, காவடி எடுத்து தீபாராதனை காட்டப்பட்டு திருச்சி சாலை, கடைவீதி, நான்கு ரோடு, சின்ன வளையம் வழியாக மணக்கரை கிழக்குத் தெருவில் உள்ளமாரியம்மன் கோயிலுக்கு சென்றடைந்தனர். மேலும் விழா முன்னிட்டு மகா மாரியம்மன், மதுரை வீரன் கருப்பண்ணசாமி உள்ளிட்ட கடவுளுக்கு 16 வகையான திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்து வண்ண மலர்களால் அலங்கரித்து தீபாராதனை காட்டப்பட்டது. ஆயிரக்கனக்கான பக்தர்கள் மகா மாரியம்மனை வழிபட்டு தரிசனம் செய்தனர் .

The post ஜெயங்கொண்டம் அருகே மகா மாரியம்மனுக்கு அலகு குத்தி காவடி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் appeared first on Dinakaran.

Related Stories: