தெற்கு மண்டலத்தில் 105 ஆக்கிரமிப்புகள் அகற்றம்

 

கோவை,ஜூன்10: கோவை மாநகராட்சி பகுதிகளில் மாநகராட்சி கமிஷனர் மு. பிரதாப் உத்தரவின் பேரில் போக்குவரத்துக்கு இடையூரான ஆக்கிரமிப்புகள் அதிரடியாக அகற்றப்பட்டு வருகின்றன. அதன்படி நேற்று தெற்கு மண்டலத்திற்குட்பட்ட 77வது வார்டு ராமமூர்த்தி ரோடு பகுதியில் கடைகள், வீடுகள், கட்டிடங்களின் முன்பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. குறிப்பாக சாலைகளை ஆக்கிரமித்து போடப்பட்டிருந்த ஷீட்டுகள் அகற்றப்பட்டன.பெட்டிக்கடைகளும் அகற்றப்பட்டன. இந்த ஆக்கிரமிப்புகளை உதவி நகரமைப்பு அதிகாரி ஜெயலட்சுமி தலைமையில் மாநகராட்சி ஊழியர்கள் ஜே.சி.பி. உதவியுடன்அகற்றினார்கள்.மொத்தம் 105 ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

The post தெற்கு மண்டலத்தில் 105 ஆக்கிரமிப்புகள் அகற்றம் appeared first on Dinakaran.

Related Stories: