வீட்டில் இருந்த 8 பவுன் நகை திருட்டு

 

கோவை, ஜூன் 10: கோவை பி.என் பாளையம் பெருமாள் கோவில் வீதியை சேர்ந்தவர் காளியம்மாள் (63). இவரது பேரன் ஹரி கிருஷ்ணன் (30). இவர், நிபந்தனை ஜாமீனில் மூதாட்டி வீட்டில் இருந்து வந்தார். இந்நிலையில், கடந்த 3-ம் தேதி காளியம்மாள் தனது உறவினர்களுடன் வேளாங்கண்ணி கோயிலுக்கு சென்றார். பின்னர், கடந்த 6ம் தேதி மீண்டும் வீடு திரும்பினார். அப்போது, வீட்டில் ஹரி கிருஷ்ணன் இல்லை.

மேலும், வீட்டில் இருந்த பீரோ திறந்து இருந்தது. அதில் இருந்து 8 பவுன் தங்க நகை, 1.5 கிலோ வெள்ளி காணவில்லை என தெரியவந்தது. இது தொடர்பாக மூதாட்டி ரேஸ்கோர்ஸ் போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post வீட்டில் இருந்த 8 பவுன் நகை திருட்டு appeared first on Dinakaran.

Related Stories: