இந்தியாவின் தொழில்நுட்ப சூழலை மேம்படுத்துவதில் ஏ.ஐ. திறன்: பிரதமர் மோடி தகவல்

புதுடெல்லி: நாட்டின் தொழில்நுட்ப சூழலை விரிவுபடுத்துவதில் செயற்கை நுண்ணறிவு திறனை பயன்படுத்துவது குறித்து பிரதமர் மோடி ஆலோசித்தார். செயற்கை நுண்ணறிவு எனப்படும் ஏஐ. தொழில்நுட்பத்தில் முன்னணி நிறுவனமான ஓபன் ஏஐ-ன் ‘சாட் ஜிபிடி’ மென்பொருள் உலகளவில் பிரபலமானது. இதன் சிஇஓ சாம் ஆல்ட்மேன் தற்போது இந்தியா வந்துள்ளார். அவர், டெல்லியில் நேற்று பிரதமர் மோடியை சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்த சந்திப்பு குறித்து அவர் கூறுகையில், ‘நரேந்திர மோடி உடனானது சிறந்த உரையாடல். இந்தியாவின் நம்பமுடியாத தொழில்நுட்ப சுற்றுச்சூழல் அமைப்பு மற்றும் ஏஐ.

தொழில்நுட்பம் மூலம் நாடு எவ்வாறு பயனடையும் என்பது பற்றி விவாதித்தோம்,’ என்று அவரது டிவிட்டரில் பதிவிட்டிருந்தார். இதற்கு பதிலளித்த பிரதமர் மோடி, ‘செயற்கை நுண்ணறி கலந்துரையாடலுக்கு நன்றி சாம் ஆல்ட்மேன். இந்தியாவின் தொழில்நுட்ப சுற்றுச்சூழலை மேம்படுத்துவதில் ஏஐ.யின் சாத்தியம் உண்மையில் மிகப்பெரியது, அதிலும் குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் மிகப்பெரியது. இந்தியர்களுக்கு அதிகாரம் அளிப்பதற்காக இந்தியாவின் டிஜிட்டல் மாற்றத்தை விரைவுபடுத்தக்கூடிய அனைத்து ஒத்துழைப்புகளையும் வரவேற்கிறோம்.’ என்று கூறினார்.

The post இந்தியாவின் தொழில்நுட்ப சூழலை மேம்படுத்துவதில் ஏ.ஐ. திறன்: பிரதமர் மோடி தகவல் appeared first on Dinakaran.

Related Stories: