பாம்பு கடித்து சிறுமி பலி

திருமங்கலம்: மதுரை மாவட்டம், கள்ளிக்குடி அருகே மையிட்டான்பட்டியை சேர்ந்தவர் கணேசன். இவரது 2வது மகள் விஜயதர்ஷினி (9), 4வது மகள் சண்முகப்பிரியா ஆகியோர் நேற்று முன்தினம், தங்கள் வீட்டின் பின்புறம் உள்ள குடிநீர் தொட்டியில் குளித்துள்ளனர். அப்போது ஒரு பாம்பு, இருவரையும் கடித்துள்ளது. இருவரும் விருதுநகர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு சண்முகப்பிரியா உயிரிழந்தார். விஜயதர்ஷினிக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

The post பாம்பு கடித்து சிறுமி பலி appeared first on Dinakaran.

Related Stories: