சேலத்தில் இன்று மாலை 6 மணிக்கு மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக செயல்வீரர்கள் கூட்டம்

சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சேலம் மாவட்டங்களுக்குட்பட்ட மாவட்ட, மாநகர, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், கிளைக் கழக செயலாளர்களின் செயல்வீரர்கள் கூட்டம் இன்று நடக்கிறது. திமுக தலைமைக் கழகம் நேற்று வெளியிட்ட அறிவிப்பு: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில், பொதுச்செயலாளர் துரைமுருகன் முன்னிலையில் சேலம் கிழக்கு, சேலம் மத்திய, சேலம் மேற்கு ஆகிய மாவட்டங்களுக்குட்பட்ட மாவட்ட, மாநகர, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், கிளைக் கழகச் செயலாளர்கள் பங்குபெறும் திமுக செயல்வீரர்கள் கூட்டம், 10ம் தேதி (இன்று) மாலை 6 மணி அளவில், சேலம், ஐந்து ரோடு, ரத்தினவேல் ஜெயக்குமார் திருமண மண்டபத்தில் நடைபெறும். இதில் சேலம் கிழக்கு, சேலம் மத்திய, சேலம் மேற்கு ஆகிய மாவட்டங்களுக்குட்பட்ட மாவட்ட, மாநகர, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், கிளைக் கழகச் செயலாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post சேலத்தில் இன்று மாலை 6 மணிக்கு மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக செயல்வீரர்கள் கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: