கோயில் அறங்காவலர்கள் குழுவில் தாழ்த்தப்பட்ட ஒருவரை உறுப்பினராக சேர்க்க வேண்டும்: திருமாவளவன் பேட்டி

சென்னை: மதிமுக பொதுச் செயலாளராக வைகோ தேர்வு செய்யப்பட்டதையடுத்து, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நேற்று வைகோ இல்லத்துக்கு சென்று சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். அப்போது முதன்மை செயலாளர் துரை வைகோ உடனிருந்தார். பின்னர், திருமாவளவன் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் 43 ஆயிரம் கோயில்கள் உள்ளன. அங்கெல்லாம், ஒரு ஆதிதிராவிடர், ஒரு பெண் இருக்கும் வகையில் அறங்காவலர் குழு நியமிக்கப்பட வேண்டும் என சட்டம் இருக்கிறது. அதை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும். இந்து சமய அறநிலையத்துறை சட்டங்களையும் அரசு முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இதற்கிடையே, விழுப்புரம் மேல்பாதி கோயில் பூட்டி சீல் வைக்கப்பட்ட விவகாரத்தை கண்டித்தும், அனைவருக்கும் வழிபாட்டு உரிமை தமிழக அரசு வழங்க வலியுறுத்தியும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது.

The post கோயில் அறங்காவலர்கள் குழுவில் தாழ்த்தப்பட்ட ஒருவரை உறுப்பினராக சேர்க்க வேண்டும்: திருமாவளவன் பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: