கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி நெடுஞ்சாலை துறை சார்பில் 12,000 மரக்கன்று நடும் விழா

*கலெக்டர் தொடங்கி வைத்தார்

வேலூர் : கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி நெடுஞ்சாலை துறை சார்பில் 12 ஆயிரம் மரக்கன்று நடும் விழாவை கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தொடங்கி வைத்தார்.
முன்னாள் தமிழக முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி மாநில நெடுஞ்சாலை துறை சார்பில் தமிழ்நாட்டில் 5 லட்சம் மரக்கன்று நடும் பணியை சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இதன் தொடர்ச்சியாக வேலூர் மாவட்டத்தில் மாநில நெடுஞ்சாலை துறை சார்பில் 12 ஆயிரம் மரக்கன்றுகள் நட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது.இதன் தொடக்க நிகழ்ச்சியாக வேலூர் காகிகப்பட்டறை டான்சி நிறுவனம் அருகே கலெக்டர் குமாரவேல்பாண்டியன் மரக்கன்று நடும் விழாவை நேற்று தொடங்கிவைத்தார்.

இந்நிகழ்ச்சியில், ஆர்டிஓ கவிதா, நெடுஞ்சாலை துறை கோட்ட பொறியாளர் தனசேகர், உதவி கோட்டப்பொறியாளர் பிரகாஷ், இளநிலை பொறியாளர் விஜயா, தாசில்தார் செந்தில் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

The post கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி நெடுஞ்சாலை துறை சார்பில் 12,000 மரக்கன்று நடும் விழா appeared first on Dinakaran.

Related Stories: