சேரம்பாடி வனச்சரகத்தில் தேயிலைத் தோட்டத்தில் காட்டு யானைகள் முகாம்

பந்தலூர் : பந்தலூர் அருகே சேரம்பாடி வனச்சரகத்தில் டேன்டீ தேயிலைத்தோட்டத்தில் காட்டு யானைகள் முகாமிட்டுள்ளதால் அப்பகுதி தோட்டத் தொழிலாளர்கள் பீதி அடைந்துள்ளனர்.
பந்தலூர் அருகே சேரம்பாடி வனச்சரகம் அரசு தேயிலைத் தோட்டம் (டேன்டீ) சேரம்பாடி சரகம் எலியாஸ் கடை பகுதியில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக 10க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் முகாமிட்டுள்ளன.

இவைடேன்டீ தோட்ட தொழிலாளர்களை அச்சுறுத்துவதோடு, பந்தலூரில் இருந்து சேரம்பாடி மற்றும் கேரள மாநிலம் வயநாடு பகுதிக்கு செல்லும் செல்லும் பிரதான நெடுஞ்சாலையை அவ்வப்போது கடந்து செல்வதால் வாகன ஓட்டிகளுக்கும் பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.தினமும் ஏராளமான வாகனங்கள் இந்த சாலையில் சென்று வருவதால், வனத்துறையினர் அப்பகுதியில் கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் சேரம்பாடி டேன்டீ பகுதியில் உள்ள பள்ளி கட்டிடத்தின் சிமெண்ட் சீட் கூரையை உடைத்து சேதப்படுத்தியது. மேலும் அந்த பகுதியில் யானைகளை கண்காணித்து வந்த யானை கண்காணிப்பு பணியாளரை யானை துரத்தியதில் அவர் அவற்றிடமிருந்து தப்பி ஓடி உயிர் பிழைத்தார்.தொடர்ந்து முகாமிட்டு வரும் காட்டு யானைகளிடமிருந்து பொதுமக்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் டேன்டீ தேயிலைத் தோட்டத்தொழிலாளர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post சேரம்பாடி வனச்சரகத்தில் தேயிலைத் தோட்டத்தில் காட்டு யானைகள் முகாம் appeared first on Dinakaran.

Related Stories: