தஞ்சை அருகே மணல் திருட்டில் ஈடுபட்டவருக்கு அபராதத்துடன் நிபந்தனை ஜாமீன் வழங்கியது ஐகோர்ட் கிளை..!!

மதுரை: தஞ்சை அருகே மணல் திருட்டில் ஈடுபட்டவருக்கு ரூ.45,000 அபராதத்துடன் நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது. ஆற்று மணலை கடத்தியதாக தஞ்சாவூரைச் சேர்ந்த பிரகாஷ் என்பவரை போலீஸ் கைது செய்தது. வழக்கில் தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி பிரகாஷ் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்தார். தஞ்சை மாவட்ட கனிமவள அறக்கட்டளைக்கு பிரகாஷ் ரூ.45 ஆயிரம் அபராதம் செலுத்த ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது. மனுதாரர் சிறையில் இருக்கும் காலத்தை கருத்தில் கொண்டு நீதிபதி இளந்திரையன் நிபந்தனை ஜாமீன் வழங்கினார்.

The post தஞ்சை அருகே மணல் திருட்டில் ஈடுபட்டவருக்கு அபராதத்துடன் நிபந்தனை ஜாமீன் வழங்கியது ஐகோர்ட் கிளை..!! appeared first on Dinakaran.

Related Stories: