பயிர்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும்: எடப்பாடி வலியுறுத்தல்

சென்னை: கோடை மழை மற்றும் சூறை காற்றால் சேதமடைந்த பயிர்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும் என்று தமிழக அரசை எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழகம் முழுவதும் கோடை மழை மற்றும் சூறை காற்றால், விவசாயிகள் பயிரிட்டிருந்த பயிர்கள் பாதிக்கப்பட்டு விவசாயிகள் பெரும் நஷ்டத்திற்கு உள்ளாகியுள்ளனர். கடந்த 5ம் தேதி சூறை காற்று மற்றும் இடி, மின்னலுடன் கூடிய கோடை மழையின் காரணமாக கடலூர் மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட குறிஞ்சிப்பாடி, விருத்தாசலம், தூத்துக்குடி மாவட்டத்தில் சாத்தான் குளம் பகுதியில் சேதமடைந்த பயிர், மரங்களையும், உடனடியாக வருவாய் மற்றும் வேளாண் துறை அதிகாரிகளை அனுப்பி கணக்கெடுத்து, வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் விவசாயிகளுக்கு முழுமையான நிவாரணம் வழங்க திமுக அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post பயிர்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும்: எடப்பாடி வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: