ஆலங்குளத்தில் திமுக தெருமுனை பிரச்சாரம்

சிவகாசி, ஜூன் 9: ஆலங்குளம் முக்குரோட்டில் வெம்பக்கோட்டை மேற்கு ஒன்றிய திமுக இளைஞர் அணி சார்பில் திராவிட மாடல் அரசின் இரண்டு ஆண்டு சாதனை விளக்க தெருமுனை பிரச்சார கூட்டம் நடைபெற்றது. விருதுநகர் தெற்கு மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் சூரியநாராயணன் தலைமை வகித்தார். வெம்பக்கோட்டை மேற்கு ஒன்றிய கழக செயலாளர் ஜெயபாண்டியன் முன்னிலை வகித்தார்.

சாத்தூர் மேற்கு ஒன்றிய கழக செயலாளர் கடற்கரை ராஜ், சாத்தூர் ஒன்றிய கழக செயலாளர் முருகேசன் வரவேற்று பேசினர். வெம்பக்கோட்டை மேற்கு ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் மகேஸ்வரன், தலைமை கழக பேச்சாளர் சரத்பாலா ஆகியோர் சிறப்புரையாற்றினர். இந்நிகழ்ச்சியில் வெம்பக்கோட்டை மேற்கு ஒன்றிய கழக நிர்வாகிகள், மாவட்ட, நகர, கிளை கழக நிர்வாகிகள், அனைத்து அணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

The post ஆலங்குளத்தில் திமுக தெருமுனை பிரச்சாரம் appeared first on Dinakaran.

Related Stories: