கிழக்கு மண்டலத்தில் மன்ற கூட்டம் 24 மணி நேர குடிநீர் திட்டப்பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தல்

 

கோவை, ஜூன் 9: கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலத்தில் மன்ற கூட்டம் மண்டலத் தலைவர் இலக்குமி இளஞ்செல்வி கார்த்திக் தலைமையில் நேற்று நடைபெற்றது. கிழக்கு மண்டல உதவி கமிஷனர் செந்தில் குமரன், மண்டலக் குழு தலைவர் தீபா இளங்கோ உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.இக்கூட்டத்தில் கலைஞரின் நூற்றாண்டு பிறந்தநாள் விழாவை ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்பாக ஒரு வருடம் கொண்டாட உத்தரவிட்ட தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

நகர்புற நலவாழ்வு மையங்களை காணொளி காட்சி வழியாக பொதுமக்களின் பயன்பாட்டிற்கு முதல்வர் துவக்கி வைத்ததிற்கும் நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் கிழக்கு மண்டலத்திற்குட்பட்ட வார்டுகளில் பாதாள சாக்கடை திட்டம் கட்டுமானப் பணிகள் மற்றும் 24 மணி நேர குடிநீர் திட்டப்பணிகள் உள்ளிட்ட வளர்ச்சிப் பணிகளை விரைந்து, தரமாக முடிக்க அறிவுறுத்தப்பட்டது.

The post கிழக்கு மண்டலத்தில் மன்ற கூட்டம் 24 மணி நேர குடிநீர் திட்டப்பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: