கிரிக்கெட் போட்டியில் கோவை அணி கால் இறுதிக்கு சுற்றுக்கு முன்னேறியது

 

கோவை, ஜூன் 8: தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பாக 19வயதிற்கு உட்பட்டோருக்கான இன்னிங்ஸ் கிரிக்கெட் போட்டிகள் தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக, கோவை பீளமேட்டில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரி மைதானத்தில் கோவை மற்றும் தூத்துக்குடி அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டி நடந்தது. இப்போட்டியின் முதல் இன்னிங்சில் கோவை மாவட்ட அணி 89.2 ஓவரில் 331 ரன்கள் எடுத்தது. முதல் இன்னிங்ஸில் இந்த அணி வீரர்களான சித்தார்த் மற்றும் கிஷோர் ஆகியோர் சிறப்பாக விளையாடி சதம் அடித்தனர்.

இதனைதொடர்ந்து தூத்துக்குடி அணி விளையாடியது. இதன் முதல் நாள் ஆட்ட முடிவில் தூத்துக்குடி அணி 7 ஓவர்களில் 18 ரன்கள் எடுத்திருந்த நிலையில் இரண்டாம் நாள் போட்டியில் 67.5 ஓவரில் அனைத்து விக்கெட்களும் இழந்து 166 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது. இந்த அணி சார்பாக விளையாடிய மாதவன் 48 ரன்களும், விஜய் 36 ரன்களும் எடுத்திருந்தனர். கோவை அணி வீரர் ஜோன்ஸ் தனது சிறப்பான பந்து வீச்சால் 31 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்களை வீழ்த்தினார். முதல் இன்னிங்ஸில் வெற்றி பெற்றதன் மூலம் கோவை மாவட்ட அணி கால் இறுதி சுற்றுக்கு முன்னேறியது. 5 விக்கெட்களை வீழ்த்திய கோவை அணி வீரர் ஜோன்ஸுக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.

The post கிரிக்கெட் போட்டியில் கோவை அணி கால் இறுதிக்கு சுற்றுக்கு முன்னேறியது appeared first on Dinakaran.

Related Stories: