27 ஆண்டுகளுக்கு பின் இந்தியாவில் நவம்பரில் உலக அழகிப் போட்டி: 130 நாடுகளின் அழகிகள் பங்கேற்பு

புதுடெல்லி: இந்தியாவில் 1996ம் ஆண்டுக்கு பிறகு, அதாவது 27 ஆண்டுகளுக்கு பின், வரும் நவம்பர் மாதத்தில் உலக அழகிப் போட்டியின் 71வது விழா நடைபெறுவதாக உலக அழகிப் போட்டியை நடத்தும் அமைப்பு அறிவித்துள்ளது. சர்வதேச அளவில் பிரபலமான உலக அழகிப் போட்டியில் இதுவரை இந்தியாவை சேர்ந்த ரீட்டா பரியா, ஐஸ்வர்யா ராய், டயானா ஹெய்டன், யுக்தா முகி, பிரியங்கா சோப்ரா மற்றும் மானுஷி சில்லர் புகழ்பெற்ற உலக அழகிப் பட்டத்தை பெற்றுள்ளனர்.

இந்நிலையில், உலக அழகிப் போட்டி நடத்தும் அமைப்பின் தலைவரும் சிஇஓ.வுமான ஜூலியா மோர்லே, “உலக அழகிப் போட்டியின் 71வது போட்டிகள் இந்தியாவில் நடைபெறும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன். இந்தியாவில் பல்வேறுபட்ட கலாசாரம், உலகளவிலான புகழ்பெற்ற தலங்களை பற்றி சொல்ல தேவையில்லை. வியத்தகு இந்தியாவில் உலக அழகிப் போட்டியாளர்கள் ஏறக்குறைய ஒருமாதம் தங்கியிருந்து இந்த போட்டிகளில் கலந்து கொள்ள உள்ளனர்,” என்று தெரிவித்தார். தற்போதைய உலக அழகியான போலந்து நாட்டை சேர்ந்த கரோலினா பைலாவ்ஸ்கா, இந்தியாவில் இதற்கான பரப்புரை மேற்கொண்டுள்ளார்.

The post 27 ஆண்டுகளுக்கு பின் இந்தியாவில் நவம்பரில் உலக அழகிப் போட்டி: 130 நாடுகளின் அழகிகள் பங்கேற்பு appeared first on Dinakaran.

Related Stories: