ஜம்முவில் திருப்பதி ஏழுமலையான் கோயில் திறப்பு: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

மஜீன் (ஜம்மு): திருப்பதி தேவஸ்தானம் சார்பில் ஜம்முவில் கட்டப்பட்டுள்ள பிரமாண்ட ஏழுமலையான் கோவில் நேற்று கும்பாபிஷேகம் செய்து திறக்கப்பட்டது. ஜம்மு-காஷ்மீர் மாநிலம், ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், திருப்பதி ஏழுமலையான் கோயில் ஜம்முவில் திறக்கப்பட்டுள்ளது. இதனை பக்தர்கள் தரிசனத்துக்காக ஆளுநர் மனோஜ் சின்கா, ஒன்றிய அமைச்சர்கள் ஜிஜேந்திர சிங், கிஷன் ரெட்டி திறந்து வைத்தனர்.

திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் சென்னை, டெல்லி, புவனேஸ்வர், கன்னியாகுமரி ஐதராபாத் ஆகிய ஐந்து இடங்களில் திருப்பதி ஏழுமலையான் கோயில்கள் உள்ளன. அதன் தொடர்ச்சியாக, 6-வதாக ஜம்முவின் மஜீன் பகுதியில் எழில்மிகு ஷிவாலிக் வனப்பகுதியில் 62 ஏக்கர் பரப்பளவு நிலத்தில், 32 கோடி ரூபாய் மதிப்பில், தங்க முலாம் பூசப்பட்ட கொடி மரத்துடன் திருப்பதி ஏழுமலையான் கோவில் கட்டப்பட்டுள்ளது.

இது குறித்து ஆளுநர் சின்கா கூறுகையில், “நாட்டின், ஜம்மு காஷ்மீரின் சனாதன பயணத்தில் இது வரலாற்று சிறப்புமிக்க தருணமாகும். பக்தர்கள் தரிசனத்துக்காக இந்த கோயில் திறக்கப்பட்டுள்ளது,” என்று தெரிவித்தார்.
இந்த புதிய கோவில் ஜம்முவில் உள்ள புகழ் பெற்ற வைஷ்ணவி தேவி கோவிலுக்கு அருகே அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

The post ஜம்முவில் திருப்பதி ஏழுமலையான் கோயில் திறப்பு: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் appeared first on Dinakaran.

Related Stories: