கடற்படையில் 1365 காலியிடம் : பிளஸ் 2 படித்திருந்தால் போதும்

இந்திய கடற்படையில் காலியாக உள்ள 1365 இடங்களுக்கு அக்னிவீர் திட்டத்தின் கீழ் தகுதியானவர்களை தேர்வு செய்ய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. திருமணமாகாத ஆண்களும், பெண்களும் விண்ணப்பிக்கலாம்.

திட்டம்: Agniveer Recruitment (SSR-02/2023 Batch)

மொத்த காலியிடங்கள்: 1365.

சம்பளம்: முதல் வருடம்- ரூ.30 ஆயிரம். 2வது வருடம்- ரூ.33 ஆயிரம். 3வது வருடம்- ரூ.36,500. 4வது வருடம்- ரூ.40 ஆயிரம்.

வயது வரம்பு: 1.11.2002க்கும் 30.04.2006க்கும் இடையில் பிறந்திருக்க வேண்டும்.
தகுதி: கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல் பாடங்கள் அடங்கிய பாடப்பிரிவில் பிளஸ் 2 தேர்ச்சி.
உயரம்: ஆண்கள்- குறைந்த பட்சம்- 157 செ.மீ., இருக்க வேண்டும். பெண்கள்- குறைந்த பட்சம்- 152 செ.மீ., இருக்க வேண்டும்.

உடல் திறன் தேர்வு
ஆண்கள்: 1.8 கி.மீ., தூரத்தை 6½ நிமிடங்களில் ஓடி முடிக்க வேண்டும். 20 ஸ்குவாட்ஸ்/12 புஷ்அப்ஸ் எடுக்க வேண்டும்.
பெண்கள்: 1.6. கி.மீ., தூரத்தை 8 நிமிடங்களில் ஓடி முடிக்க வேண்டும். 10 ஸ்குவாட்ஸ்/10 சிட் அப்ஸ் எடுக்க வேண்டும்.

கடற்படையால் நடத்தப்படும் எழுத்துத்தேர்வு, உடற்தகுதித் தேர்வு, உடல் திறன் தேர்வு மற்றும் மருத்துவத் தகுதி அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவர். எழுத்துத் தேர்வில் ஆங்கிலம், கணிதம், அறிவியல், ெபாது அறிவு பாடங்களிலிருந்து கொள்குறி வகை கேள்விகள் கேட்கப்படும்.

கட்டணம்: ரூ.550/-. இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.

www.joinindiannavy.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 15.6.2023

The post கடற்படையில் 1365 காலியிடம் : பிளஸ் 2 படித்திருந்தால் போதும் appeared first on Dinakaran.

Related Stories: