கல்லார் அருகே ஓடும் காரில் திடீர் தீ சுற்றுலா பயணிகள் மூவர் உயிர் தப்பினர்

மேட்டுப்பாளையம்,ஜூன்8: சென்னை சூளைமேடு கங்கை நகர் மேற்கு பகுதியைச்சேர்ந்தவர் சரண் கிஷோர்(22).இவர் தனக்குச் சொந்தமான காரில் தனது நண்பர்களான வசீகரன்(22),ஜெகதீஷ்(22) உள்ளிட்டோருடன் ஊட்டிக்கு சுற்றுலா வந்தனர். காரினை சரண் கிஷோர் ஓட்டினார் கல்லாறு முதல் கொண்டை ஊசி வளைவு அருகே சென்று கொண்டிருந்த போது காரின் இன்ஜினில் திடீரென புகை வந்துள்ளது.இதனையடுத்து அலறி அடித்துக் கொண்டு காரை விட்டு மூவரும் வெளியேறினர்.திடீரென என்ஜின் தீப்பற்றி எரிந்துள்ளது.

பின்னர்,இச்சம்பவம் குறித்து மேட்டுப்பாளையம் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. விரைந்து வந்த தீயணைப்பு நிலைய அலுவலர் பாலசுந்தரம் தலைமையில் தீயணைப்புத்துறையினர் சுமார் அரை மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இருப்பினும் கார் முற்றிலும் தீயில் இருந்து நாசமானது.இச்சம்பவம் குறித்து மேட்டுப்பாளையம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். என்ஜினில் ஏற்பட்ட கோளாறு காரணமாக திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

ஊட்டிக்கு நண்பர்களுடன் சுற்றுலா சென்ற போது கார் தீப்பற்றி எரிந்த சம்பவம் மேட்டுப்பாளையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post கல்லார் அருகே ஓடும் காரில் திடீர் தீ சுற்றுலா பயணிகள் மூவர் உயிர் தப்பினர் appeared first on Dinakaran.

Related Stories: