பாஜ.வுக்கு எதிராக பாட்னாவில் வரும் 23ல் எதிர்க்கட்சிகள் கூட்டம்: ராகுல், மு.க.ஸ்டாலின், மம்தா பங்கேற்பார்கள் என அறிவிப்பு

புதுடெல்லி: பாஜ.வுக்கு எதிரான எதிர்க்கட்சிகளின் கூட்டம் பாட்னாவில் வரும் 23ம் தேதி நடக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் 2024 மக்களவை தேர்தலில் பாஜ.வை தோற்கடிக்கும் முயற்சியாக அனைத்து எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் பீகார் மாநில முதல்வர் நிதிஷ் குமார் மும்முரமாக ஈடுபட்டுள்ளார். இதற்காக காங்கிரஸ் தலைவர்கள் கார்கே, ராகுல், மற்றும் மம்தா பானர்ஜி, கெஜ்ரிவால் உள்ளிட்ட தலைவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

இதற்கான எதிர்க்கட்சிகளின் கூட்டம் ஜூன் 12ம் தேதி நடக்க இருந்த நிலையில், அந்த தேதியில் வேறு நிகழ்ச்சி இருப்பதால் பாட்னா கூட்டத்தில் பங்கேற்க இயலாது என்று காங்கிரஸ், வேறு சில கட்சிகளும் தெரிவித்தன. இதனால் அந்த கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், வரும் 23ம் தேதி பாட்னாவில் எதிர்க்கட்சிகள் கூட்டம் நடைபெறும் என்று ஐக்கிய ஜனதா தள தலைவர் லலன் சிங் தெரிவித்தார்.

இது குறித்து அவர் கூறுகையில்:
பாட்னாவில் வரும் 23ம் தேதி பாஜ.வுக்கு எதிராக ஒன்று திரளும் எதிர்க்கட்சிகள் கூட்டம் நடைபெற உள்ளது. ராகுல் காந்தி, மல்லிகார்ஜூன கார்கே, தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின், மம்தா பானர்ஜி, அகிலேஷ் யாதவ், ஹேமந்த் சோரன், கெஜ்ரிவால் ஆகியோர் பங்கேற்க உள்ளனர். மேலும், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், இந்திய கம்யூனிஸ்ட் செயலாளர் டி.ராஜா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர் சீதாராம் யெச்சூரி, உத்தவ் தாக்கரே, உள்ளிட்ட தலைவர்களும் பங்கேற்கின்றனர்,” என்றார்.

The post பாஜ.வுக்கு எதிராக பாட்னாவில் வரும் 23ல் எதிர்க்கட்சிகள் கூட்டம்: ராகுல், மு.க.ஸ்டாலின், மம்தா பங்கேற்பார்கள் என அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: