குஜராத், இமாச்சலில் காங்கிரஸ் தேர்தல் செலவு ₹130 கோடி

புதுடெல்லி; குஜராத், இமாச்சலபிரதேசத்தில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் செலவு ரூ.130 கோடி என்று தேர்தல் கமிஷனில் செலவீன அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதில் இமாச்சலில் ரூ.27.02 கோடியும், குஜராத் மாநிலத்தில் ரூ.103.62 கோடியும் செலவழிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் இமாச்சலபிரதேசத்தில் ரூ.49.69 கோடி செலவழித்துள்ளதாக பா.ஜ தெரிவித்து உள்ளது. காங்கிரஸ் கட்சியை விட இமாச்சல் தேர்தலில் ரூ.22.67 கோடி அதிகமாக பா.ஜ செலவழித்துள்ளது. ஆனால் குஜராத் தேர்தல் செலவு அறிக்கையை இன்னும் பா.ஜ தேர்தல் கமிஷனில் தாக்கல் செய்யவில்லை.

The post குஜராத், இமாச்சலில் காங்கிரஸ் தேர்தல் செலவு ₹130 கோடி appeared first on Dinakaran.

Related Stories: