மக்கள் ஆட்சி மாற்றத்தை விரும்புவதால் நாட்டில் பாஜ.வுக்கு எதிரான அலை வீசுகிறது: சரத் பவார் பேச்சு

அவுரங்காபாத்: ‘’மக்கள் ஆட்சி மாற்றத்தை விரும்புவதால், நாட்டில் பாஜ.வுக்கு எதிரான அலை வீசுகிறது,’’ என்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் தெரிவித்தார். மக்களவை தேர்தல் வரும் 2024ல் நடக்க உள்ளது. அதே போல், மகாராஷ்டிரா சட்டப்பேரவைக்கான தேர்தல் அடுத்தாண்டு பிற்பகுதியில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவார், ‘’கர்நாடக தேர்தலில் பாஜ தோல்வியை சந்தித்துள்ளது.

இதன் அடிப்படையில் பார்த்தால் மக்கள் மாற்றத்தை விரும்புவது தெரிகிறது. மக்கள் ஆட்சி மாற்றத்தை விரும்புவதால், நாட்டில் பாஜ.வுக்கு எதிரான அலை வீசுகிறது. இனிவரும் தேர்தல்களில் ஒரு மாற்றம் இருக்கும். இதை சொல்வதற்கு ஜோசியர் தேவையில்லை. இந்த தோல்வியை தொடர்ந்து, ஆளும் பாஜ அரசு மக்களவை தேர்தலில் மட்டுமே கவனம் செலுத்தும். மக்களவை தேர்தலுடன் சட்டப்பேரவை தேர்தல்களையும் சேர்த்து நடத்தும் திட்டத்தை போட்டு குழப்பி கொள்ள வாய்ப்பில்லை,’’ என்று தெரிவித்தார்.

The post மக்கள் ஆட்சி மாற்றத்தை விரும்புவதால் நாட்டில் பாஜ.வுக்கு எதிரான அலை வீசுகிறது: சரத் பவார் பேச்சு appeared first on Dinakaran.

Related Stories: