திருக்குறளையும், கலைஞரையும் பிரித்து பார்க்க முடியாது திருவள்ளுவர் தான் கலைஞர் கலைஞர் தான் திருவள்ளுவர்: நூற்றாண்டு விழாவில் வைகோ புகழாரம்

சென்னை: கலைஞர் நூற்றாண்டு தொடக்க விழாவில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேசியதாவது: அண்ணாவால் பாராட்டப் பெற்றவர் கலைஞர், பெரியார் தன்னுடைய வாழ்நாளில் எத்தனையோ விழாக்களை எடுத்தாலும் 1948ம்ஆண்டு திருக்குறளுக்கு விழா எடுத்தார், அந்த விழாவில் பட்டுக்கோட்டை அழகிரிசாமியை கொண்டு தாளமுத்து நடராஜன் சிலையை திறக்க வைத்தார். அவர் 1949ம் ஆண்டு திருக்குறள் மாநாட்டை நடத்தினர். இந்த நிகழ்வுகள் எல்லாம் தன்னுடைய நெஞ்சில் ஆழ பதிந்துள்ள காரணத்தால் கலைஞர் தன்னுடைய 14 வயதில் வாருங்கள் தோழர்களே வந்துள்ள இந்தி பேயை அடித்து விரட்டுவோம் என்று எழுதி போர்க்களத்தில் நுழைந்தார்.

கலைஞர் அமைத்த வள்ளுவர் கோட்டத்தின் உயரம் 128 அடி, அதை அமைத்து திறப்பதற்கு நாள் எதிர்பார்த்துக் கொண்டு இருந்த போது தான் ஆட்சி கலைக்கப்பட்டது. குறள் ஓவியத்தை தீட்டியவரின் கார் 13 ஆண்டுகளாக வள்ளுவர் கோட்டத்தை கடந்து தான் செல்லும், ஆனால் ஒருமுறை கூட வள்ளுவர் கோட்டத்திற்கு கால் எடுத்து வைக்கவில்லை, திமுகவினர் வள்ளுவர் கோட்டத்திற்கு எதிரே அண்ணாவிற்கு சிலை எழுப்பினார்கள். அந்த சிலையை திறந்து வைக்கும் போது வள்ளுவர் கோட்டம் கண்ட கலைஞரால் இந்த சிலை திறந்து வைக்கப்படுகிறது என்று எழுதினார்.

1989ம் ஆண்டு திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தது. அதை திறந்து வைக்க கலைஞர் உள்ளே செல்கிறார். அங்கு வி.பி.சிங், என்.டி.ராமராவ் வந்தனர். அதன்பிறகு மீண்டும் திமுக ஆட்சி கலைக்கப் படுகிறது. மூன்று கடல்கள் சந்திக்கும் குமரி முனையில் வள்ளுவருக்கு சிலை எழுப்பினார். அந்த சிலை 2000ம் ஆண்டு பிறந்த போது திறக்கப்பட்டது. திருக்குறளையும், கலைஞரையும் பிரித்து பார்க்க முடியாது. திருவள்ளுவர் தான் கலைஞர், கலைஞர் தான் திருவள்ளுவர். தமிழ் இருக்கும் வரை திருக்குறள் இருக்கும், திருக்குறள் இருக்கும் வரை நாயகன் கலைஞர் இருப்பார். இவ்வாறு வைகோ கூறினார்.

The post திருக்குறளையும், கலைஞரையும் பிரித்து பார்க்க முடியாது திருவள்ளுவர் தான் கலைஞர் கலைஞர் தான் திருவள்ளுவர்: நூற்றாண்டு விழாவில் வைகோ புகழாரம் appeared first on Dinakaran.

Related Stories: