மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி என முழங்கியவர் கலைஞர்: பாலகிருஷ்ணன் பேச்சு

சென்னை: மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் பேசியதாவது: பெரியார் இறுதியாக கவலைப்பட்டதை நிறைவேற்றும் வகையில் முதல் முறையாக, அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் உத்தரவை கலைஞர் போட்டார். மாநில சுயாட்சியை பொறுத்தவரையில், மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில சுயாட்சி என்று முழங்கினார். அனைத்து மாநில தலைவர்களையும் ஒரே மேடையில் ஏற்றி மாநில சுயாட்சியை முன்னெடுத்து சென்றவர் அவர். அவர் பங்கை நாம் குறைத்து மதிப்பிட முடியாது. தமிழ்நாட்டில் இஸ்லாமியருக்கு ஒதுக்கியுள்ள இட ஒதுக்கீட்டை யாரும் பறிக்க முடியாத சட்ட பாதுகாப்பாக உள்ளது. அருந்ததியருக்கும் 3 சதவீதம் ஒதுக்கிய பெருமை கலைஞரை சாரும். இப்படி மாநில சுயாட்சிக்காக போராட்டிய அவரின் கொள்கையை களங்கப்படுத்தும் வகையிலும், அதை முறியடிக்கவும் பார்க்கிறார்கள்.

மொழி உரிமையை, மாநில உரிமையை தட்டிப் பறிக்க ஒன்றிய அரசு முயற்சிக்கிறது. இந்த நூற்றாண்டு விழா, சனாதன சக்திகளுக்கு சாவு மணி அடிக்கிற விழாவாக இருக்க வேண்டும். அன்றைக்கு இந்த தேசம் எப்படி கலைஞரை எதிர்பார்த்ததோ, அந்த வகையில் இன்றைக்கு சனாதன சக்திகளை வீழ்த்துவதற்கு உற்ற சக்தியாக எதிர்பார்க்கும் நிலை முதல்வர் மு.க.ஸ்டாலின் மூலம் ஏற்பட்டுள்ளது. அணியை உருவாக்கும் பணியில் முன்னெடுப்போடு அடுத்த தேர்தலில் மோடி ஆட்சி முடிவுக்கு வரும் என்ற உறுதியோடு முதல்வருக்கு மா.கம்யூ சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். சென்னையில் கார்ல்மார்க்சுக்கு ஒரு சிலையை நிறுவ வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

The post மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி என முழங்கியவர் கலைஞர்: பாலகிருஷ்ணன் பேச்சு appeared first on Dinakaran.

Related Stories: